ஒரு காபி விலை ரூ.1000 - அப்படி என்ன ஸ்பெஷல்? இருக்கே...

இந்த தேயிலையில் தயாரிக்கப்படும் காஃபியின் ருசி மற்றும் தனித்துவமான மணம், காஃபி பிரியர்களை கிறங்கடிக்க வைக்கும்

 • Trending Desk
 • | October 16, 2021, 18:13 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  ஒரு கப் காபி விலை ஆயிரம் ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், உண்மை தான். ஹைதராபாத்தில் இருக்கும் காபி ஷாப்பில் ஒரு கப் காபியின் விலை ஆயிரம் ரூபாய். அந்த விலைக்கு, காபியில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கும் என நீங்கள் கேட்கலாம். இந்த காபிக்காக பிரத்யேகமாக தேயிலை வாங்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

  ஹதராபாத்தில் இருக்கும் பிரபலமான காஃபி ஷாப் தான் நிலோஃபர் கஃபே. உணவுப் பிரியர்கள் மற்றும் காஃபி பிரியர்களுக்கு இந்த கஃபே குறித்து நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், இந்த கஃபேவில் அடிக்கடி ஸ்பெஷல் ஐட்டங்களை இறக்கிக் கொண்டே இருப்பார்கள். இது குறித்து பேசிய நிலோஃபர் காஃபி ஷாப்பின் நிர்வாக இயக்குநர் சஷாங்க் அனுமூலா, இந்த காபியின் பெயர் ’கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ’ என அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.

  அசாமில் உள்ள மைஜான் பகுதியில் விளையும் காஸ்ட்லியான தேயிலையில் இந்த டீ தயாரிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.75,000 ரூபாய் எனத் தெரிவித்தார். ஏலத்தில் பங்கேற்றபோது சுமார் 1.5 கிலோ தேயிலை மட்டுமே தங்களுக்கு கிடைத்ததாக கூறிய அனுமூலா, அதனை மொத்தமாக வாங்கி வந்துவிட்டதாக கூறினார்.

  Also read: வங்கதேசத்தில் வெடித்த மதக் கலவரம்.. 4 பேர் பலி..

  இந்த தேயிலையில் தயாரிக்கப்படும் காஃபியின் ருசி மற்றும் தனித்துவமான மணம், காஃபி பிரியர்களை கிறங்கடிக்க வைக்கும் என்றும் கூறினார். கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ, அந்தக் கடையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மெனு அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, நிலோஃபர் காஃபி ஷாப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காஃபியில் பால் சேர்க்கப்படுவதில்லை. அதேபோல், கிரீமி, இனிப்பு இரானி தேநீர் போன்றும் இருக்காது.

  இதுகுறித்து பேசிய சஷாங்க் அனுமூலா, "கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ, பால் சேர்க்கப்படுவதில்லை. அதேபோல் அதிகம் பேர் சுவைத்து சாப்பிடும் கிரீமி, இரானி தேநீர் போன்ற சுவைகளும் இருக்காது. உஸ்மானியா வெண்ணெய், பாதாம் மற்றும் உலர் பழ குக்கீஸ் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு வொர்த்தாக இருக்கும்" எனத் தெரிவித்தார். நிலோஃபர் கஃபேவைத் தவிர பஞ்சாரா ஹில்ஸ் கடையில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

  Also read:   தோனி குறித்து சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!

  அசாமின் மைஜன் கோல்டன் டிப்ஸ் தேயிலைகள் நறுமணத்திற்கு பெயர் பெற்றது. நாட்டின் விலையுயர்ந்த தேயிலை வகைகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு கவுகாத்தி ஏல தேயிலை மையத்தில் ஒரு கிலோ 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது சாதனையாக இருந்தது.. இதேபோல் கொல்கத்தாவில் சாலையோர டீ விற்பனையாளர் ஒருவர் ஒரு கப் டீயை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். போ -லீ டீ என்ற அந்த டீயில் பயன்படுத்தப்படும் தேயிலை, ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது போ -லீ டீயானது, பு-ஏர் டீ அல்லது புவேர் அல்லது போலய் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.