நிமிடத்திற்கு ₹ 11 ஆயிரம், மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம், நாளுக்கு ₹ 1.62 கோடி...! பிரதமரின் பாதுகாப்புச் செலவு

நிமிடத்திற்கு ₹ 11 ஆயிரம், மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம், நாளுக்கு ₹ 1.62 கோடி...! பிரதமரின் பாதுகாப்புச் செலவு
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: February 13, 2020, 10:08 AM IST
  • Share this:
பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், சிஆா்பிஎஃப் படையினரின் பாதுகாப்பில் 56 முக்கிய பிரமுகா்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்கள் யார் என்ற கேள்விக்கு, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பதிலளிக்க இயலாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

முக்கிய பிரமுகா்களுக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவா்களுக்கான பாதுகாப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட எஸ்.பி.ஜி-க்கு (சிறப்பு பாதுகாப்புப் படை) ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 540.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அப்போது பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என நால்வர் எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரிவில் இருந்தனர்.

சமீபத்தில் சோனியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி மட்டுமே எஸ்.பி.ஜி பிரிவில் உள்ளார்.

சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading