முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி, மும்பை, பெங்களூருவில் ஒரு சதுர அடி இடத்தின் விலை இவ்வளவா? முழு விவரம்..!

டெல்லி, மும்பை, பெங்களூருவில் ஒரு சதுர அடி இடத்தின் விலை இவ்வளவா? முழு விவரம்..!

மற்ற நாடுகளில் நிலத்தின் விலைகள்

மற்ற நாடுகளில் நிலத்தின் விலைகள்

ஒரு சதுர அடி நிலத்தின் விலை இவ்வளவா என்று ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு, உலக அளவில் சொத்துக்களின் விலை அதிகரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் கனவு இல்லம் என்பது 50 லட்சம் வரை இருக்க கூடும், அதையும் மீறினால் 1 கோடியை நெருங்கலாம். ஆனால், தற்போதைய நிலையில், வீடு மற்றும் மனைகளின் விலை பன்மடங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது உலக அளவில் எந்தெந்த நாடுகளில், அதிக விலைக்கு இடம் விற்பனை செய்யப்படுகிறது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் ஒருவர் ஒரு மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8.3 கோடி ரூபாய் வைத்திருந்து, மற்ற நாடுகளிலோ அல்லது இந்தியாவின் முக்கியமான பகுதிகளிலோ இடம் வாங்க வேண்டும் என்றால், எவ்வளவு சதுர அடி நிலம் வாங்க முடியும் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் ஒரு இடம் வாங்க வேண்டும் என்றால், 8.3 கோடி ரூபாயை வைத்து கொண்டு, 183 சதுர அடி இடத்தை தான் வாங்க முடியும். அங்கு ஒரு சதுர அடி நிலத்தின் விலை சுமார் 4,53,000 ரூபாய். இப்படி உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் முக்கியமான இடங்களில் ஒரு சதுர அடி நிலம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு லட்சங்களில் செலவு செய்ய வேண்டும்.

குறிப்பாக, நியூயார்க்கின், முக்கியமான பகுதிகளில் இடம் வாங்க வேண்டும் என்றால், ஒரு சதுர அடியின் விலை சுமார் 2,33,000 ரூபாய். லண்டனில் ஒரு சதுர அடி இடம் என்பது 2,27,000 ரூபாய். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை 1,75,000 ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை 1,33,000 ரூபாய். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒரு சதுர அடியின் விலை 1,28,000 ரூபாய். துபாயில் இடம் வேண்டும் என்றால் ஒரு சதுர அடிக்கு சுமாராக 74,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை, மும்பையில் ஒரு சதுர அடி நிலம் வாங்க 58,000 ரூபாயும், டெல்லியில், 34 ஆயிரம் ரூபாயும், பெங்களூருவில் ஒரு சதுர அடி 20,000 ரூபாயாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சதுர அடி நிலத்தின் விலை!!!

நாடுவிலை
மொனாக்கோரூ. 4.53 லட்சம்
நியூயார்க்ரூ.2.23 லட்சம்
லண்டன்ரூ.2.27 லட்சம்
சிட்னிரூ.1.75 லட்சம்
பீஜிங்ரூ.1.33 லட்சம்
டோக்கியோரூ.1.28 லட்சம்
துபாய்ரூ.74,000
மும்பைரூ.58,000
டெல்லிரூ. 34,000
பெங்களூருரூ.20,000

First published: