• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எதிர்காலத்தில் இந்தியா EV-க்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருக்கிறது - நிதின் கட்கரி தகவல்!

எதிர்காலத்தில் இந்தியா EV-க்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருக்கிறது - நிதின் கட்கரி தகவல்!

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

நிலக்கரி அடிப்படையிலான மின்சாரம் தயாரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே சூரிய, அலை, காற்றாலை ஆற்றல் மற்றும் பயோமாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் தான் அரசின் முழு கவனம் உள்ளது என்றும் பேசினார்.

  • Share this:
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் காணப்படும் உயர்வு காரணமாக புதிய வாகனங்களை வாங்குவோரின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி இருக்கிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இதுவரை இல்லாத அளவு கடந்த சில மாதங்களாக விற்பனை சூடு பிடித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வந்தாலும், பெட்ரோல் பைக்குகளை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகமாக இருப்பது மக்களை சற்று தயக்கம் கொள்ள வைக்கிறது.

இதனிடையே சமீபத்தில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (EV) விலை அடுத்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களின் விலை அளவிற்கு குறையும் என்று கூறி இருக்கிறார். நிலக்கரியை பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை விரைவுபடுத்துவது குறித்து டென்மார்க்கின் சஸ்டைனபிலிட்டி அறக்கட்டளை ஏற்பாடு செய்த வெபினார் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,
"அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்குள், எலெக்ட்ரிக் வாகனங்களின் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் கார்) விலை, அவற்றின் பெட்ரோல் மாடல்களுக்கு சமமான விலையில் விற்கப்படும் சூழல் உருவாகும். ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 5% மட்டுமே இருக்கிறது.

லித்தியம் அயன் பேட்டரிகளின் விலையும் தற்போது குறைந்து வருகிறது. தவிர, பெட்ரோல் பங்க்குகள் EV சார்ஜிங் நிலையங்களை அமைத்து கொள்ள அனுமதிக்கும் கொள்கையை அரசு ஏற்கனவே வகுத்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை தங்கு தடையின்றி பயன்படுத்த ஏதுவாக வாடிக்கையாளர்களுக்கு நிறைய எலெக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட்ஸ்கள் இருக்கும்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, அதே போல EV சார்ஜிங் நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறுவதை அரசு உறுதி செய்யும்.

நிலக்கரி அடிப்படையிலான மின்சாரம் தயாரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே சூரிய, அலை, காற்றாலை ஆற்றல் மற்றும் பயோமாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் தான் அரசின் முழு கவனம் உள்ளது என்றும் பேசினார். நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ மீட்டருக்கு பெட்ரோல் அடிப்படையிலான வாகனத்தின் விலை ரூ.10, டீசல் வாகனத்தின் விலை விலை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.7 என்று இருக்கும் போது, EV-க்களுக்கு கிமீ ஒன்றுக்கு ரூ.1 என எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சத்தை குறிப்பிட்டார்.

Also read... மாருதி சுசூகி இக்னிஸ் முதல் ரெனால்ட் க்விட் வரை - பெஸ்ட் மைலேஜ் தரும் கார்கள் விவரம்!

மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் முக்கிய நெடுஞ்சாலைகளில் குறைந்தது 700 EV சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏற்படுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இ-கார்ட்ஸ், இ-ஆட்டோஸ், இ-சைக்கிள்ஸ் போன்ற சிறிய பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளதாக கட்கரி கூறினார். கோவிட் தொற்றுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார் விற்பனை முறையே 145% மற்றும் 190% உயர்ந்துள்ளதாகவும், EVக்களின் இந்த இரண்டு பிரிவுகளிலும் எதிர்காலத்தில் இந்தியா ஏற்றுமதியாளராக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: