• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விமானபோக்குவரத்தும், மருத்துவக்கல்லூரியும் காஷ்மீரின் உண்மையான பிரச்னைக்கு தீர்வாகாது - மெகபூபா முஃப்தி விமர்சனம்

விமானபோக்குவரத்தும், மருத்துவக்கல்லூரியும் காஷ்மீரின் உண்மையான பிரச்னைக்கு தீர்வாகாது - மெகபூபா முஃப்தி விமர்சனம்

மெகபூபா முஃப்தி

மெகபூபா முஃப்தி

ஒப்பனை நடவடிக்கைகள் காஷ்மீரின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

  • Share this:
    அமித் ஷாவின் காஷ்மீர் வருகை இங்குள்ள உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வாகாது என மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கும் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகார அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் நேற்று சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்தார். மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அமித் ஷா இந்த பயணத்தை அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    இதுகுறித்து மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பதிவில், “ உள்துறை அமைச்சர் ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான  போக்குவரத்தை தொடங்குவதும், மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் புதிதல்ல. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அரைடஜன் மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை தற்போது செயல்பாட்டிலும் உள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது ஜம்மூ காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒப்பனை நடவடிக்கைகள் இங்குள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. உள்துறை அமைச்சரின் வருகை காரணமாக காஷ்மீரில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜம்மூவுக்கு வெளியில் உள்ள சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கையின் மூலம் மேலும் பதற்றமான் சூழலை உருவாக்குகின்றனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: