ஆண்டிபாடி பரிசோதனை என்றால் என்ன? கொரோனா தொற்றை உறுதி செய்ய எவ்வாறு உதவுகிறது?

ஆண்டிபாடி பரிசோதனை என்றால் என்ன? கொரோனா தொற்றை உறுதி செய்ய எவ்வாறு உதவுகிறது?
மாதிரிப்படம். (Photo: Reuters)
  • News18
  • Last Updated: April 3, 2020, 2:39 PM IST
  • Share this:
உடலில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் இருக்கிறதா என கண்டறிவதற்கு பதிலாக, வைரஸுக்கு எதிராக உருவாகும் ஆண்டிபாடிஸ் உடலில் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதன் மூலம் தொற்று இருக்கிறதா எனக் கூறுவது தான் ஆண்டி பாடி பரிசோதனை.

நமது உடலில் நோய் தாக்கும்போது, உடலில் எதிர்ப்பு சக்தி காரணமாக ஆண்டி ஜென் உருவாகும். இப்படி உருவாகும் ஆண்டி பாடியானது நமது வாழ்நாள் முழுவதும் உடலிலேயே இருக்கும். நம்மை ஒரு முறை தாக்கிய அதே வைரஸ் மீண்டும் நமது உடலுக்குள் நுழைய முடியாத வகையில் இந்த ஆண்டி பாடிக்களே தற்காத்துக்கொள்ளும். ஒரு முறை அம்மை நோய் வந்துவிட்டால் மீண்டும் வராது என்பதற்கான அடிப்படைக் காரணம் இது தான். இது தான் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

ஆனால் சில வைரஸ் அல்லது பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆண்டி பாடிஸ் வாழ்நாள் முழுவதும் இல்லாமல் உடலில் குறைந்து கொண்டே வரும். கொரோனா வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் என தெரியாது.


உடலில் இந்த ஆண்டி பாடிஸ் இருக்கிறதா என பரிசோதித்து அதன் மூலம் அந்த வைரஸ் உடலில் வந்துள்ளதை அறிந்துகொள்ளும் முறை ஆண்டிபாடி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. தொடக்க நிலையில் ஒரு விதமான ஆண்டிபாடி உடலில் இருக்கும். வெவ்வேறு நிலைகளில் ஆண்டிபாடிக்களும் மாறும். எனவே இந்த பரிசோதனையை செய்யும் போது உடலில் வைரஸ் பாதிப்பு என்ன நிலையில் உள்ளது என அறிய முடியும். பரிசோதனை முடிவுகள் அதி விரைவில் கிடைத்துவிடும். 10 நிமிடங்களில் மேற்கொள்ளும் இந்த சோதனைக்கு செலவும் குறைவே ஆகும்.
நாம் இப்போது கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தி வருகிற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தெரிய குறைந்தது ஒரு நாள் எடுக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசம் என்றாலும், தனியார் சோதனை மையத்தில் ரூ.4500 கட்டணம் ஆகிறது.

எனினும், நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனை வசதி இல்லாத நிலையில், மக்கள் தொகை அதிக நெருக்கடியாக உள்ள பகுதியில் ஆண்டிபாடி சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்கிறது.சோதனை முடிவுகள் கொரோனா தொற்றினை உறுதி செய்தால் அந்த நோயாளிக்கு பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும். அதே சமயம் ஆண்டிபாடி சோதனை மூலம் தொற்று உறுதியாகாவிட்டால், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். எனினும், இதற்காக இந்தியாவில் 10 லட்சம் ஆண்டிபாடி சோதனைகள் தேவைப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்கிறது.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading