வேகமெடுக்கும் தடுப்பூசி பணி - மத்திய அரசை விமர்சிக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மேற்கத்திய நாடுகளிலும், ஜப்பானிலும் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

    இந்தநிலையில் அவசர கால பயன்பாட்டுக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த மருந்து தயாரிப்பு பணிகள் அடுத்த 3 வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளிலும் ஜப்பானிலும் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியாளர்களான ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் கூடிய விரைவில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்க வேண்டும்" என்று தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் வி.கே.பவுல் தெரிவித்துள்ளார். இதனால் உலக சுகாதார அமைப்பு அல்லது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு "இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    முன்னதாக, கொரோனா தடுப்பூசி பணிகளை விரைப்படுத்தும் படி ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த போது, ஆளும் பாஜக அரசு அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளுக்கு அவசரகால அடிப்படையில் மத்திய அனுமதி அளித்து வருவதை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


    இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். பின்னர் உங்களை பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உங்களுடன் சண்டையிடுவார்கள், இறுதியில் நீங்கள் வெல்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: