Home /News /national /

Corona | இந்தியாவில் தடாலடியாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

Corona | இந்தியாவில் தடாலடியாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

Corona

Corona

புதிய வகை ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.47 லட்சம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 27% கூடுதலாகும்.

    இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்லி, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3வது கொரோனா அலை பரவல் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்` 2,47,417 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 84,825 பேர் குணமடைந்துள்ள நிலையில், 380 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 13.11% அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது.

    Also read:  Corona | இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்.. சீனாவில் கெடுபிடி - வீடியோ

    நாட்டிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,723 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 27,561 பேருக்கும், கேரளாவில் 12,742 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதிய வகை ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 5,488 பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,367 பேரும், ராஜஸ்தானில் 792 பேரும், டெல்லியில் 549 பேரும், கேரளாவில் 486 பேரும், கர்நாடகாவில் 479 பேரும், மேற்குவங்கத்தில் 294 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 275 பேரும் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாட்டில் இதுவரை 154.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி