கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்
கொரோனா வைரஸ்.
  • Share this:
கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 571-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் எந்தெந்த வழிகளில் பரவும் என்ற கேள்விகள் தற்போதுவரை எழுந்துவருகின்றன.

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த தொற்றுயோய் ஆய்வாளர் மருத்துவர் ராமன் கங்காகேட்கர், ‘கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது. காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா பாதித்தவர்கள் தும்மும்போது வெளிப்படும் நீர்க்குமிழ்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது’என்று தெரிவித்தார்.


Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading