Home /News /national /

நவராத்திரி திருவிழா ரத்து- குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு..

நவராத்திரி திருவிழா ரத்து- குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு..

ஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி

ஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி

கொரோனா பரவலால் இந்தாண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறாது என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வழக்கமாக மகாலய அமாவாசைக்கும், மகா சஷ்டிக்கும் இடையே வரக்கூடியது தான் நவராத்திரி எனும் கொலு கொண்டாட்டம். ஆனால் இந்தாண்டு புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசைகள் வருவதால், புரட்டாசி முதல் நாள் செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்பட்டது.

    இரண்டாவது அமாவாசை புரட்டாசி 30-ஆம் தேதி வருகிறது. புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் மறுநாள் ஐப்பசி 1 நவராத்திரி கொலு கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆனால் கொரோனா பரவலால் இந்தாண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறாது என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

    ஆண்டுதோறும் குஜராத் மாநிலத்தில் 9 நாட்களுக்கு, அம்மாநில அரசு சார்பில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அப்போது அரங்கேறும் கர்பா நடன நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம்.

    மேலும் படிக்க...மேலும் ஒரு அல்-கொய்தா பயங்கரவாதி கைது: டெல்லி, மும்பை, கொச்சி நகரங்களுக்கான தாக்குதல் திட்டம் விசாரணையில் அம்பலம்..

    இந்த நிலையில் இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால், அக்டோபர் 17 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்த நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இம்முடிவு எடுகப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gujarat, Navarathri, Navaratri 2020

    அடுத்த செய்தி