கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... குறைந்த நேரத்தில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறை...!

கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... குறைந்த நேரத்தில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறை...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 1, 2020, 2:18 PM IST
  • Share this:
கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் இவ்வளவு பாதிப்பு அதிகரித்துள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை என்கிறது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா பாதிப்புகளை இந்தியா சந்தித்து வந்தது.

பிப்ரவரி இறுதியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, விழித்துக்கொண்ட அரசு பல நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டது.


தற்போது தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த 12 மணி நேரத்தில் 240 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகம்பேர் பாதிக்கப்பட்டதை கண்டறியப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

இன்றைய காலை நிலவரப்படி 1637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 133 பேர் குணமடைந்துள்ளனர். 1466 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading