நாடு முழுவதும் ஏப்ரல்-14 வரை சுங்கக்கட்டணம் ரத்து..!

நெடுஞ்சாலை அமைச்சகம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரை எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல்-14 வரை சுங்கக்கட்டணம் ரத்து..!
சுங்கக் கட்டணம் ரத்து
  • Share this:
ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால், மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கை கடைபிடிப்பதால் சுங்கச்சாவடிகளில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வாகனங்களை கட்டணம் வசூலிக்காமல் செல்ல அனுமதிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நெடுஞ்சாலை அமைச்சகம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரை எந்த சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி அளித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்