இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 3,116 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய பதிவை விட 498 எண்ணிக்கை குறைவானதாகும். இதேபோல் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி தற்போது இந்தியாவில் 38,069 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.41 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவ் ரேட் 0.50 ஆக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.71 ஆக உள்ளது.
இதையும் படிங்க -
''ஊடக விவாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கப் போவதில்லை'' - மாயாவதி அறிவிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்காக இந்தியா முழுவதும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளளது.
தற்போது வரை இந்தியாவில் மொத்தம் 180.13 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 லட்சத்து 31 ஆயிரத்து 275 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க -
குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம்...!
தமிழகத்தை பொருத்தவரை நேற்றைய நிலவரப்படி, மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 815- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 265 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.