5 நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று பரவும் தகவல்கள் - பிரதமர் மோடி விளக்கம்

5 நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று பரவும் தகவல்கள் - பிரதமர் மோடி விளக்கம்
மோடி
  • News18
  • Last Updated: April 9, 2020, 6:55 AM IST
  • Share this:
பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பிரசாரம் செய்யப்பட்டுவரும் நிலையில், பிரதமர் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அனைத்து மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவ, திரைத்துறை மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உடன் அவர் ஆலோசனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பிரசாரம் செய்து வந்தனர்.


இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மோடி, “சிலர் முன்னெடுத்துச் செல்லும் இந்த பிரசாரம் எனது கவனத்திற்கு வந்தது. இது சர்ச்சைகளுக்குள் எடுத்துச் செல்லும் விஷயம் போல தெரிகிறது.

என் மீதான நல்லெண்ணத்தில் யாரும் இதை முன்னெடுத்திருந்தால், அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், என்னை கவுரவிக்க விரும்பினால், கொரோனா பிரச்னை தீரும் வரை, ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அதுவே, என்னை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading