• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு..!

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு..!

காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா 

காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா 

முதல்வரை சந்தித்த சற்று நேரத்தில் தொற்று உறுதியானது.

  • Share this:
    குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.ல்.ஏ.வாக இருப்பவர் இம்ரான் கெடவாலா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் ரூபானியை அவர் சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது . கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வருடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

    இந்நிலையில் முதல்வருடனான சந்திப்பு நடைபெற்றபோது தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வரின் செயலாளர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

    இவர் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: