HOME»NEWS»NATIONAL»corona virus vaccine congress doubts mut

தடுப்பூசிகளால் கொரோனாவிலிருந்து விடுதலை: பிரதமர் மோடி; - காங்கிரஸ் சந்தேகம்

பாரத் பயோ டெக் தயாரிப்பு தடுப்பூசிக்கு அனுமதியளித்தது சர்வதேச விதிமீறல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கண்டித்துள்ளார்.

தடுப்பூசிகளால் கொரோனாவிலிருந்து விடுதலை: பிரதமர் மோடி; - காங்கிரஸ் சந்தேகம்
மாதிரி படம்
  • Share this:

கொரோனா வைரஸுக்கு எதிராக 2 தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. தடுபூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்து கொரோனாவிலிருந்து விடுதலை என்று கூறி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்க புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதே போல் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனமும் ஐசிஎம்ஆர் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் ஒவ்வொருக்கும் இரண்டு தவணைகளில் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசிகளை 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும்.



மனிதர்களுக்கு பயன்படுத்தும் 3ம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து விடுதலை பெற திருப்பு முனை: மோடி

கொரோனா வைரஸிலிருந்து விடுதலை பெறுவதற்கான நம் உறுதியான நடவடிக்கைகளில் இது ஒரு திருப்பு முனை. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது இந்தியர்களுக்குப் பெருமை.

தற்சார்பு இந்தியா என்பதை நனவாக்கும் வகையில் நம் அறிவியல் சமூகம் செயல்பட்டு வருகிறது. மற்றவர்களின் மீதான அக்கறைகளை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.

அதே நேரத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன் களவீரர்களின் தியாகத்தையும் பங்களிப்பையும், சேவையையும் நினைவு படுத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

பாரத் பயோ டெக் தயாரிப்பு தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது சர்வதேச விதிமீறல்: காங்கிரஸ் சந்தேகம்!

பாரத் பயோ டெக் தயாரிப்பு தடுப்பூசிக்கு அனுமதியளித்தது சர்வதேச விதிமீறல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கண்டித்துள்ளார்.

அவர் கூறும்போது, “நாடாளுமன்ற உள்துறை நிலைக்குழுத் தலைவராக நான் இருக்கிறேன், கொரோனா குறித்து நாங்கள் விரிவாக ஆய்வு நடத்தி வருகிறோம்.

தடுப்பூசி மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அதற்காக விதிகளை மீற முடியாது. மக்கள் உடல் நலனில் விளையாடக் கூடாது.

குறிப்பாக முன் கள வீரர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதா? ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைகளை முடித்துள்ளது. அதன் முடிவுகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. எனவே மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க அதன் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

ஆனால் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? இது சர்வதேச விதிகளை மீறியதாகும்” என்றார்.
Published by:Muthukumar
First published: