தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது - பிரதமர் மோடி.

தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது - பிரதமர் மோடி.

பிரதமர் மோடி

ஒருசில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். தடுப்பூசி விலை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எட்டப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 • Share this:

  மக்களவை, மாநிலங்களவை இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.  பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   காணொலி ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பங்கேற்றனர்.
  Published by:Gunavathy
  First published: