மகாராஷ்டிரா, கேரளா வில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய குழு கவலை

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்கள் குறித்து மத்திய குழு கவலை தெரிவித்துள்ளது. அம்மாநிலங்களில் ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்கள் குறித்து மத்திய குழு கவலை தெரிவித்துள்ளது. அம்மாநிலங்களில் ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.

  நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.

  ஏப்ரல்-மே மாதங்களில் உச்சத்துக்குச் சென்ற கொரோனா தொற்றுப் பரவல் ஜூனில் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இலவச தடுப்பூசித் திட்டம் பின்னடைவு கண்டதும் கவனிக்கத்தக்கது.

  இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை நடத்தி ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

  அதன்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர்.

  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளதாவது:

  கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு கண்காணிக்கும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கி வருகின்றனர். இந்த குழுவினர் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை செய்து வருகிறார். இந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Published by:Muthukumar
  First published: