Home /News /national /

மார்த்தட்டிக் கொள்வது...வைரஸ் பரவல் இல்லாத ஊர்களை ஊதிப்பெருக்குவது..: பாஜக மீது ராகுல், சசிதரூர் தாக்கு

மார்த்தட்டிக் கொள்வது...வைரஸ் பரவல் இல்லாத ஊர்களை ஊதிப்பெருக்குவது..: பாஜக மீது ராகுல், சசிதரூர் தாக்கு

சசி தரூர்

சசி தரூர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து தன் செயல்களுக்கு மார்தட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,46,116 ஆக அதிகரித்துள்ளது.

    உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ கிட், நிதியுதவி என ஏராளமானவற்றை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

    வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், “இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன்.

    என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது? எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன?, ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா” என்று கேட்டிருந்தார்.

    இன்று மீண்டும் மத்திய அரசு மீது பாய்ந்துள்ளார் ராகுல் காந்தி, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய அரசு தொடந்து தனது செயல்களுக்கு மார்தட்டிக் கொண்டு, பெருமையடிக்கிறது. மத்திய அரசு தனது கடமைகளை, பணிகளை முறையாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்தநிலை வந்திருக்குமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சுகாதார அமைச்சர் மீது சசிதரூர் கடும் தாக்கு:

    கடந்த 7 நாட்களாக இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதற்கு சசி தரூர் பதிலடி கொடுத்தார்.

    சசி தரூர்


    இந்நிலையில் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தனை ட்விட்டரில் டேக் செய்து சசி தரூட் கூறியதாவது:

    “மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கரோனா பிடியில் சிக்கி மூச்சுவிடத் திணறும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று யதார்த்தம் குறித்துப் பேசுகிறார்.

    இந்தியாவின் 3-வது கட்டத் தடுப்பூசி முன்பதிவு செய்துள்ளதற்கு வந்துள்ள குறுஞ்செய்தி குறித்தோ, போலி மருந்துகளை விளம்பரம் செய்தது குறித்தோ, உறுதி செய்யப்படாத சிகிச்சை குறித்தோ அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி கொண்டாடுவார் எனக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நம்முடைய அரசு வெளியிடும் எந்த எண்ணிக்கையையும் யாரும் நம்பமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Congress, COVID-19 Second Wave, Modi, Rahul gandhi, Shashi tharoor

    அடுத்த செய்தி