Home /News /national /

கொரோனா வைரஸால் இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது: நரேந்திர மோடி

கொரோனா வைரஸால் இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது: நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 10-வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்

    கொரோனா வைரஸால் இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

    10-வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது, பிரதமர் மோடி பங்கேற்று 10-வது தவணையை வெளியிட்டார். இந்த 10-வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 1 கோடிக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் - திருப்பதி தேவஸ்தானம் தகவல்

    இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸால் இந்தியாவின் வேகத்தைத் தடுக்க முடியாது, 2022-ல் நமது வேகத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

    மேலும் பேசிய அவர், இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வரலாறு காணாத அன்னிய முதலீடு இந்தியாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வசூலிலும் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் குறிப்பாக விவசாயத்தில் புதிய முன்னுதாரணங்களை நாம் வடிவமைத்துள்ளோம்.

    கடந்த ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.70 லட்சம் கோடி வரை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், யுபிஐ மூலம் மட்டுமே இந்தியா சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் செயலிகள் வேலை செய்கின்றன. இவற்றில் கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் செயலிகள் உருவாகியுள்ளன என்றார்.

    நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் குடும்பங்கள், குறிப்பாக சிறு விவசாயிகள், பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் 10-வது தவணையைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி