• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி : யாருக்கு முன்னுரிமை

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி : யாருக்கு முன்னுரிமை

 கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி

இரண்டாவது அலை பாதிப்பை விட, மூன்றாவது அலை பாதிப்பு சற்று குறைவாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் இணை நோயுள்ளவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    12 முதல் 18வயதுள்ள சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மூலம் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸைகோவ்-டி தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது.

    அதன்படி, யாருக்கு முதலில் தடுப்பூசி செலுத்துவது என்பது குறித்து தேசிய எதிர்பாற்றல் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா விளக்கமளித்துள்ளார். அதன்படி, 12 வயதுக்கு மேலுள்ள சிறுவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். மேலும், ஸைகோவ்-டி மருந்தைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கோவேக்சின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்துவிடும் எனத் தெரிவித்தார்.

    இந்நிலைரயில், நாட்டில் கொரோனா மூன்றாவது அலை, அக்டோபர் மாதத்தில் உச்சமடையும் என்று பேரிடர் மேலாண்மை கல்வி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    கொரோனா மூன்றாவது அலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனம் அமைத்த வல்லுநர் குழு ஆய்வுசெய்தது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், குழந்தைகளுக்கான பாதிப்புகள் மற்றும் குணமடைதல் என்ற தலைப்பிலான இந்த அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட, அக்டோபர் இறுதியில் உச்சமடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதுடன், மற்றவர்களுக்கு பரவவும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மூன்றாவது அலை ஏற்படும் என்றும், இது இரண்டாவது அலை பாதிப்பை விட சற்று குறைவாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படும்போது, அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள், சுவாசக் கருவிகள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை போதிய அளவில் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் 82 சதவீதம் அளவுக்கு குழந்தைகளுக்கான மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், பொது சுகாதார மையங்களில் 63 சதவீத மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, நிலைமை மோசமாக உள்ள சூழலில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது, போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது, தடுப்பூசி போடுவதில் தாமதம் ஆகிய காரணங்களால் மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Must Read : ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

    மேலும், வீடுகளிலிருந்தே சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது, குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது, குழந்தைகள் மத்தியில் மனஅளவில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு சிகிச்சை முடியும் வரை, அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் அல்லது பெற்றோர் தங்கிக் கொள்வதற்கான கட்டமைப்பை சிகிச்சை மையத்திலேயே ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதல் இரண்டு அலைகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கவும், தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்கள், மருந்துகள் ஆகியவற்றை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: