Home /News /national /

பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனுடன் ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, வார இறுதியில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் விதித்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றன. இதேபோல், 2 தவணை தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தடுப்பூசிக்கான காலஅட்டவணை ஜனவரி 8ம் தேதி  (இன்று) வெளியிடப்படும். பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இத்தாலியில் இருந்து ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று


    இதேபோல், முந்தைய 2 தவணைகளில் எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும்.கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்படும்.

    மேலும் படிங்க: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Omicron

    அடுத்த செய்தி