Home /News /national /

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்: முதல் நாளில் 9,674 பயனாளர்கள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்: முதல் நாளில் 9,674 பயனாளர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியா முழுவதும் நேற்று 9,674 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தினசரி கோவிட்19 பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 18 முதல் 59 வயதினர் 9,674 பேருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் ஆனது சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது.

நேற்று முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவான பின்னரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்பவர்கள் தங்கள் விவரங்களை புதிதாக COWIN தளத்தில் பதிய வேண்டியது இல்லை. முதல் டோஸ் செலுத்திய போதே அவர்களின் தரவுகள் தளத்தில் பதியப்பட்டிருக்கும். நாடு முழுவதும் இதுவரை 185.74 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 99.54 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 83.90 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

12-14 வயதைச் சேர்ந்தவர்களுக்கு 2.22 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. 15-17 வயதினரில் 5 கோடிக்கும் மேல் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசி டோஸ்களின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் வெகுவாக குறைத்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை ரூ.600இல் இருந்து ரூ.225ஆக குறைத்துள்ளது. அதேபோல், கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோட்டெக் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை ரூ.1,200இல் இருந்து ரூ.225ஆக குறைத்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் தடுப்பூசியின் விலையுடன் கூடுதலாக ரூ.150 வரை சேவை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.

பிறந்தநாள் பார்டிக்கு சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வால் உயிரிழப்பு: ஆளுங்கட்சி பிரமுகர் மகன் கைது

மேலும், பயனாளர்கள் தங்களின் முதல் இரண்டு டோஸ்களை எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ, அதே தடுப்பூசியைத் தான் முன்னெச்சரிக்கை டோஸ்கும் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 861 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,058 ஆக குறைந்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Corona Vaccine

அடுத்த செய்தி