Home /News /national /

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசு

தடுப்பூசி - மாதிரிப்படம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவி ஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

    இதைத் தவிர்த்து ரஷ்யாவின் ஸ்புட்னிக், ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரா ஜெனகா போன்றவை குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசு அளித்த தகவல்படி சுமார் 45 கோடிப் பேர் மட்டுமே 2 டோஸ்களை செலுத்தியுள்ளனர். சுமார் 90 கோடி பேர் முதல் டோஸை செலுத்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    மீதம் இருப்பவர்களையும் தடுப்பூசி போட வைப்பதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொதுமக்களை ஈர்க்கும் விதமாக, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என்று, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Also Read : கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

    டிசம்பர் 4 முதல், டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்போர், இந்த போட்டிக்கு தகுதியானவர்கள். இந்த அறிவிப்பானது குஜராத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மற்ற மாவட்ட, நகராட்சி நிர்வாகங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகின்றன.

    Also Read : தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

    இதற்கிடையே, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Corona Vaccine

    அடுத்த செய்தி