இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் தொடங்கும்- ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் தொடங்கும்- ஹர்ஷ் வர்தன்

ஹர்ஷ் வர்தன்

ஜனவரியின் ஏதேனும் ஒரு வாரத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படக் கூடும் என்றார் ஹர்ஷ் வர்தன்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

  கொரோனா தடுப்புப் பணியின் தற்போதை நிலை தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கமளித்துள்ளார். அதில், ஜனவரியின் ஏதேனும் ஒரு வாரத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படக் கூடும் என அவர் கூறியுள்ளார். அதேநேரம், மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள அரசு தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  தடுப்பூசி போடுவதற்கு கடந்த 4 மாதங்களாக மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாக கூறியுள்ள ஹர்ஷ் வர்தன், இதற்காக 260 மாவட்டங்களில் 20,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாநிலம், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் தடுப்பூசி போடும் பணிக்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், ராணுவத்தினர், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இந்த முன்னுரிமை பட்டியலில் இடம்பெறுவார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி 6 முதல் 7 மாதங்கள் நடைபெறும் என்றும் அவர் வர்தன் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: