Home /News /national /

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் 13 மடங்கு அதிகரிப்பு...

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் 13 மடங்கு அதிகரிப்பு...

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

உத்தரப்பிரதேசத்தில் 2 டோஸ்களையும் செலுத்தியவர்கள் 53 சதவீதத்தினராக உள்ளனர். மூன்றாவது அலையை கவனத்தில் கொண்டு தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 16-ம்தேதி வரையில் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட 13 மடங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. இதனை கொரோனா பரவலின் 3வது அலை என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதற்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் ஞாயிறன்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு மொத்த்ம் 7,695 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 13 மடங்கு அதிகமாகும். அதிகபட்சமாக தலைநகர் லக்னோவில் 1,115 பேருக்கும், நொய்டா நகரில் 1,149 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் ஜனவரி 16-ம்தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தினமும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.


    1000-க்கும் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் செயல்படும் ஜிம்கள் அடைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு தடுப்பு நடவடிக்கையாக 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய தரவுகளின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 2 டோஸ்களையும் செலுத்தியவர்கள் 53 சதவீதத்தினராக உள்ளனர். மூன்றாவது அலையை கவனத்தில் கொண்டு தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 16-ம்தேதி வரையில் தடை விதித்துள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவிக்கை ஜனவரி 14-ம்தேதி வெளியாகும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21. 24-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27-ம்தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஒவ்வொரு கட்டங்களுக்கும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் மனுக்களை திரும்பப் பெற 3 நாட்கள் அளிக்கப்படுகிறது.

    Also read... 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் - கடற்கரையில் தடுப்பூசியின் மணல் சிற்பம் வடிவமைப்பு!

    உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு முறையே, பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி