• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா 2ஆம் அலை குறைந்துவிட்டதா? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா 2ஆம் அலை குறைந்துவிட்டதா? - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளது.

  • Share this:
    நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது

    தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. எனினும், 222 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

    கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வந்துள்ளது. கடந்த வாரம், கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் கிட்டத்தட்ட சரிபாதி அளவிலானவர்கள் (49.85 சதவீதம்) கேரள மாநிலத்தவர்கள் ஆவார்கள் என தெரிவித்துள்ளார்.

    நேற்று முன்தினம் நாடு முழுவதும் 16 லட்சத்து 49 ஆயிரத்து 295 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு விகிதம் 1.85 சதவீதம். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.39 சதவீதம் ஆகும். நேற்று பாதிப்புக்குள்ளான 30 ஆயிரத்து 549 பேரில், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 77.4 சதவீதத்தினர் ஆவார்கள். தினசரி பாதிப்பில் கேரளா மாநிலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 46 சதவீதம் ஆகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனாவால் நேற்று மகாராஷ்டிராவில் 90 பேர் இறந்த நிலையில், கேரளாவில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் இறப்புவிகிதம் 1.34 சதவீதமாக தொடர்கிறது. இந்நிலையில், நேற்று கொரோனாவால் இறப்பை சந்திக்காத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாக அந்தமான் நிகோபார், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிவை இடம் பெற்றுள்ளன.

    Must Read : சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா- மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று உறுதி!

    இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று இந்த எண்ணிக்கையில் 8,760 குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,04,958 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.28 சதவீதம் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: