Corona | இதுவரையில் இல்லாத கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,000 பேர் உயிரிழப்பு- 2 லட்சத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு

மாதிரிப் படம்

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கிவருகிறது. ஒவ்வொருநாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய புதிய உச்சங்களை எட்டிவருகிறது. இதுவரையில் உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைக் கடந்துள்ளது. வேகமாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1.79 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 2,01,187 ஆக அதிகரித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 66,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவைத் தொட்ரந்து கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: