Home /News /national /

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன.. ஒன்றை மட்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன.. ஒன்றை மட்டும் நீட்டித்துள்ளது மத்திய அரசு

கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று இந்தியா முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று இந்தியா முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று இந்தியா முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஒன்றை தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மத்திய அரசு பொதுமுடக்கம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள், பொது போக்குவரத்து நிறுத்தம், கல்வி நிறுவனங்கள் மூடல், ஆன்லைன் வகுப்புகள் என புதியதொரு மோசமான அனுபவத்தை இந்தியா எதிர்கொண்டது.

    கொரோனாவுக்கு தடுப்பூசிகள் வராத சூழலில் மாஸ்க் அணிதல், சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. பின்னர் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டு அவை பரவலாக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன.

    இதையும் படிங்க - பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31, 2023 வரை கால அவகாசம்.. ஆனால், ஒரு கண்டிஷன்!!

    கொரோனா முதல் அலை மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது அலையின்போது அதன் தாக்கம் சற்று குறைந்திருந்தது. அதனை விட மூன்றாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று இந்தியா முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், மாஸ்க் அணிதலை தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க - பான் கார்டுடன் ஆதாரை இணைக்காத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம்- வருமான வரித்துறை

    முக கவசம் அணிவதுடன், கைகளை கிருமி நாசினி கொண்டு பொதுமக்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 23-ம்தேதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 31-ம்தேதிக்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Corona Vaccine

    அடுத்த செய்தி