முகப்பு /செய்தி /இந்தியா / Corona relief fund | உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் ஃபவுண்டேசன்

Corona relief fund | உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் ஃபவுண்டேசன்

2035ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கார்பன் மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு ரிலையன்ஸ் பயணித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

2035ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கார்பன் மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை கொண்டு ரிலையன்ஸ் பயணித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

கொரோனா நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 4,000 பேர் வரை தினசரி உயிரிழக்கின்றனர். உலகம் கண்டிராத இதுபோன்ற நெருக்கடியான சூழலில் நாட்டு கடைகோடி மனிதனிலிருந்து, பெரும் தொழிலதிபர்கள் வரை தங்களால் ஆன உதவிகளை வழங்கிவருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம், கொரோனா முதல் அலை பாதிப்பின்போதே பெருமளவில் உதவிகளைச் செய்தது. தற்போது இரண்டாவது அலை பாதிப்பிலும் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

இந்தநிலையில், ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவுக்கு எதிராக வாரம் முழுவதும் 24 மணி நேரமும் நடைபெறும் போரில் ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் பங்கேற்க வேண்டும் என்று பொறுப்புள்ள மற்றும் அக்கறையுள்ள குடிமகனாக கருதுகிறேன். ரிலையன்ஸ் ஃபவுண்டேசனின் கடமை என்பது விரிவானதும், நிலையானதும் என அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். நாட்டுக்கு தேவைப்படும் வகையில் பல்வேறு வகையில் செயல்படவேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளோம்.

உத்தரகாண்ட் அரசாங்கம், அம்மாநில மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாயை வழங்குவதற்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் மகிழ்ச்சியடைகிறது. நாம் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போரிடுவோம். நாட்டுக்கு உதவுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Reliance Foundation