இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சேர்த்து கொரோனாவால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று கொரோனாவுக்காக தற்போது சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 859 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க - இந்தியாவில் மலர்ந்த காதல்... டெல்லி வழக்கறிஞரை கரம்பிடிக்கும் உக்ரைன் இளம்பெண்...
நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு 328 குறைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை பரவலாக்கப்பட்ட நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க - பீகார் முதல்வர் மீது மனநிலை பாதிக்கப்பட்டவர் தாக்குதல்... வைரலாகும் வீடியோ
கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,262 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது வரை 394 பேர் கொரோனா தொற்றிற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 10-வது நாளாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.