Home /News /national /

159 மருத்துவர்கள், 100 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்

159 மருத்துவர்கள், 100 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்

Corona Positive

Corona Positive

தற்போது கல்வி நிலையங்களில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

    பாட்னாவின் நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 159 பேரும், பாட்டியாலா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்தியாவில் கொரோனா இரண்டு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 3வது அலை பாதிப்பை சந்திக்க இருப்பதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சில மாநிலங்களில் 3வது அலை தொடங்கிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    டெல்டா வேரியண்டால் தூண்டப்பட்ட இரண்டாம் அலை பரவலால் கடுமையான பாதிப்பை நாடு சந்தித்தது. இருப்பினும் அதன் பின்னர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் பின்னர் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. பின்னர் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

    Also read:  Omicron | மெட்ரோ நகரங்களில் ஏற்படும் பாதிப்புகளில் 75% ஓமைக்ரான் தான் - மூத்த விஞ்ஞானி

    இந்நிலையில் தற்போது கல்வி நிலையங்களில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துவ மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வரும் மாணவர்கள் உடனடியாக தங்களின் அறைகளை விட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக பாட்டியாலாவில் உள்ள தாப்பர் இன்ஸ்டிடூட் ஆஃப் இஞ்சினியரிங் கல்லூரியில் படித்த 93 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் கடந்த 4 வாரங்களில் 300% கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    Also read:  உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

    இது போல பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (NMCH) சில மருத்துவர்களுக்கு அறிகுறி தென்பட்டதால், கடந்த ஜனவரி 2ம் தேதியன்று 194 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 84 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்தது. இன்று மேலும் 72 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

    Also read: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவரை எட்டி உதைத்த போலீஸ்காரர் - வைரல் வீடியோ

    மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவத்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,007 பேர் குணமடைந்துள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,46,70,18,464 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 4,82,017 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி