இங்கிலாந்து, பஹ்ரைனில் அனுமதி: இந்தியாவில் தன் நிறுவன கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

இங்கிலாந்து, பஹ்ரைனில் அனுமதி: இந்தியாவில் தன் நிறுவன கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

மாதிரிப் படம்

இங்கிலாந்து, பஹ்ரைனில் மக்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பைசர் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்கவேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் இதுவரையில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் மட்டும் 59,0051 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரிட்டன் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவுக்கான அதிகாரபூர்வ மருந்தாக ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் மருந்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் யாருக்கு செலுத்த வேண்டும் என்பதை, தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துக் கூட்டுக் குழு முடிவு செய்யும் என பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹன்காக் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனமும்,ஜெர்மனியைச் சேர்ந்த பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் செலுத்தப்படும். முதற்கட்டமாக 2 கோடி பேருக்கு செலுத்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 1,300 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதனை ஏற்கெனவே அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன் பதிவு செய்துள்ளன. இந்தநிலையில், பைசர் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு பஹ்ரைன் நாடும் முடிவு செய்துள்ளது.

  இந்தநிலையில், இந்தியாவில் பைசர் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு அவசர அனுமதி வழங்கவேண்டும் இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்திய நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: