கேரளத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக, ஒரேநாளில் 46,387 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டு தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 1,15,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், இதுவரை இல்லாத அளவாக 46,387 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 37 சதவிகிதமாகப் பதிவான நிலையில், இன்று தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 40.2 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
எனினும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பேட் நியூஸ்
மேலும் 15,388 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,59,594 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் 32 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே கணக்கில் சேர்க்கப்படாத 309 உயிரிழப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 51,501 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக கேரளாவில் வரும் 23 மற்றும் 30 தேதிகளில் (அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்பாக இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.