Home /News /national /

பாதிப்பு அதிகரித்தால் முழு ஊரடங்கு... பொதுமக்களை எச்சரிக்கும் மேயர்

பாதிப்பு அதிகரித்தால் முழு ஊரடங்கு... பொதுமக்களை எச்சரிக்கும் மேயர்

மாதிரி படம்

மாதிரி படம்

மும்பை மாநகராட்சி தரப்பில் 30,565 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.2 சதவீதம் அதாவது 3,735 படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும், 14 சதவீத (2,720)ஐ.சி.யு. படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பாதிப்பு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகரித்து விட்டால், முழு ஊரடங்கு போடப்படும் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், முழு ஊரடங்கு ஏற்படுத்துவது என்பது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்றும் மேயர் கூறியுள்ளார்.

    மும்பையில் நேற்யை நிலவரப்படி ஒரே நாளில் மட்டும் 8,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021 ஏப்ரல் 18-ம்தேதிக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் ஒருநாள் பாதிப்பு ஆகும்.

    இதையும் படிங்க : அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்

    இனி வரும் நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். நேற்று மட்டும் மும்பையில் 40 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மும்பையில் ஒமைக்ரான் பாதிப்பு 368-யை தொட்டுள்ளது. பரவலை கவனத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு நீங்கலாக மற்ற அனைத்து பள்ளிகளையும் ஜனவரி 31-ம்தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : நாட்டையே உலுக்கிய Bulli Bai செயலி விவகாரத்தில் இஞ்சினியரிங் மாணவர் கைது

    10,12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு வரலாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது என்பதால், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் அல்லது கட்டிடங்களை சீல் வைப்பதற்கும் மும்பை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி, ஒரு கட்டிடம் அல்லது பகுதியில் உள்ள மொத்த நபர்களில் 20 சதவீதம் பேருக்கு தொற்று இருக்கிறது என்றால் அந்த பகுதி அல்லது கட்டிடம் சீல் வைக்கப்பட்டு விடும்.

    இதையும் படிங்க : அதிகரிக்கும் கொரோனா - பஞ்சாப்பில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

    இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் முழு ஊரடங்கு ஏற்படுத்தப்படும் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் 15 சதவீத மருத்துவமனை வசதிகள் மும்பையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்புகளுடன் நேற்று மட்டும் 574 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மும்பை மாநகராட்சி தரப்பில் 30,565 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.2 சதவீதம் அதாவது 3,735 படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும், 14 சதவீத (2,720)ஐ.சி.யு. படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி