Home /News /national /

மீண்டும் வந்தது ஊரடங்கு... டெல்லியில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படுகின்றன

மீண்டும் வந்தது ஊரடங்கு... டெல்லியில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படுகின்றன

ஓமைக்ரான்

ஓமைக்ரான்

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 50% இருக்கை வசதியுடன் இயக்கப்படும். திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் மூடப்படும்

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திரையரங்குகள், ஜிம், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது.

    ஒமைக்ரேன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதன் முடிவில் அதிரடி அறிவிப்பு ஒன்றை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். இதன்படி டெல்லியில் பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

    - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

    - திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் மூடப்படும்

    - வார இறுதி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாது.

    - சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறந்திருக்கும்

    - கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை.

    - காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பார்களும் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.

    இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

    - விருந்து மண்டபம், ஆடிட்டோரியம் மூடப்படும்

    - ஹோட்டல்கள் திறந்திருக்கும். ஆனால் ஹோட்டலுக்குள் விருந்து மற்றும் கூட்டம் நடத்தும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

    - ஸ்பாக்கள், ஜிம்கள், யோகா நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்

    - வெளிப்புற யோகா அனுமதிக்கப்படும்

    இதையும் படிங்க : இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

    - டெல்லி மெட்ரோ 50% இருக்கை வசதியுடன் இயங்கும். பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    - ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 50% இருக்கை வசதியுடன் இயக்கப்படும்

    - ஆட்டோ, இ ரிக்‌ஷா, டாக்ஸி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாவில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    - தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுகளை நடத்தலாம்.

    - விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும்.

    - பொது பூங்காக்கள் திறந்திருக்கும்

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

    - திருமண விழா மற்றும் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    - சமூக, அரசியல், மத, திருவிழா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

    - மத வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும். ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    - பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும்

    - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50% பணியாளர்களுடன் தனியார் அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி