திருப்பதிக்கு வரும் பக்தர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது 3 நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்த நிலையில், அதற்கான சர்டிபிகேட்டை உடன் கொண்டுவராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
திருப்பதி செல்ல, தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசன டோக்கன் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்து இருக்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பக்தர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாமி தரிசனத்திற்காக செல்லும்போது திருப்பதி மலையில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றை வரிசையில் தேவஸ்தான ஊழியர்கள் பரிசோதித்தனர். ஆனாலும் பக்தர்கள் இது போன்ற எந்த சான்றுகளும் இல்லாமல் திருப்பதி மலைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
எனவே இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களை தடுத்து நிறுத்தி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வந்திருக்கும் பக்தர்களை மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கின்றது.
Must Read : ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இதனால் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் இதுபோன்ற சான்றுகளுடன் வராத பக்தர்கள் அல்லது இரண்டு தடுப்பூசி போட்டு கொள்ளாத பக்தர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தால் நெகட்டிவ் சர்டிபிகேட்டை கொண்டுவராத பக்தர்கள் ஆகியோர் திருப்பதி மலைக்கு செல்லாமலேயே ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.