கேரளாவில் மனைவி, குழந்தையைப் பார்க்க பேருந்தை திருடி 200 கி.மீ ஓட்டிச் சென்றவர் கைது - 4 மாவட்ட காவலர்களை ஏமாற்றி சென்ற சுவாரஸ்யம்

மாதிரிப் படம்

கேரளாவில் ஊரடங்கில் மனைவியைப் பார்ப்பதற்காக பஸ்ஸை திருடி 200 கி.மீ தூரம் ஓட்டிவந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கேரளா மாநிலம் பதனாம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் தினூப். அவருக்கு வயது 30. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கூட்டில் இருந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க திருவல்லாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஊரடங்கின் காரணமாக பேருந்துகள் இல்லாமல் இருந்துள்ளது. கோழிக்கூடிலிருந்து திருவல்லாவுக்கு இடையில் 270 கி.மீ தூரம்.

  அப்போது, தனியார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்த்துள்ளார். அதைப் பார்த்த அவர், பேருந்தை அங்கிருந்து இயங்கியுள்ளார். பின்னர், பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் பேருந்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இரவில் மாவட்ட எல்லைகளைக் கடக்கும்போது காவல்துறையினர் நிறுத்தி பேருந்து செல்வது குறித்து தினூப்பிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, அவர் புலம்பெயர் தொழிலாளர்களை அழைப்பதற்காக பேருந்து செல்வதாக கூறியுள்ளார். காவல்துறையும் அவருடைய பதிலைக் கேட்டு அவரை தொடர்ந்து செல்ல அனுமதித்துள்ளனர்.

  மலப்புரம், திரிச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களைக் கடந்து கோட்டயம் மாவட்டத்தில் நுழைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான குமரகோம் பகுதிக்கு சென்றபோது அங்கே காவல்துறையினர் மறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தினூப் மாட்டிக்கொண்டார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தினூப் சிறையில் அடைக்கப்பட்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: