இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 12 ஆயிரம் அதிகரித்து, 42 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 42 ஆயிரத்து 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,757 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 4,10,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 1.32 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியே 52 லட்சத்து 86 ஆயிரத்து 570 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,44,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மலேசியா நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள். சென்னையில் 203 பேருக்கும், கோயம்புத்தூரில் 208 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும் தஞ்சாவூரில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 26ஆம் தேதி, 1,551 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 1,802-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு வார காலத்தில் குணமடைவோரைவிட கூடுதலாக 251 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மண்டல அளவில் பார்க்கும்போது, திருவொற்றியூரில் கடந்த 26ஆம் தேதி 50 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2ஆம் தேதி 63 ஆக அதிகரித்துள்ளது.
Must Read : சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா- மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும் தொற்று உறுதி!
மணலியில் 33ஆக இருந்த கொரோனா பாதிப்பு, 31ஆகக் குறைந்துள்ளது. மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் அதிகரித்துள்ளது. அண்ணா நகர், வளசரவாக்கம் பகுதிகளில் சிறிதளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மணலி, அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, CoronaVirus, Covid-19