ஹோம் /நியூஸ் /இந்தியா /

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தீவிரமாகும் பரிசோதனை!

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தீவிரமாகும் பரிசோதனை!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரி, மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச்(Shahganj) பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயணிகளுக்கு தெரியாமல் மாற்றக்கூடாது.. விமான நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

மேலும், உருமாற்றம் பெற்ற கொரோனா என்பதை அறிந்துகொள்வதற்காக மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், ஆக்ராவில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: China, Corona positive, India, Omicron BF 7 Variant