இறப்போரை தகனம் செய்ய பஞ்சாபில் நடமாடும் எரியூட்டு மேடை

நடமாடும் தகன மேடை, மாதிரி எரியூட்டு சோதனை

கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்ய முடியாத அளவிற்கு மயானங்கள் நிரம்பி வழியும் நிலையில், நடமாடும் தகன மேடையை, ரோபர் இந்திய தொழில்நுட்ப மையம் உருவாக்கியுள்ளது.

 • Share this:
  கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்ய முடியாத அளவிற்கு மயானங்கள் நிரம்பி வழியும் நிலையில், நடமாடும் தகன மேடையை, ரோபர் இந்திய தொழில்நுட்ப மையம் உருவாக்கியுள்ளது.

  இங்கு, ரோபர் நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையம் இந்த நடாமாடும் எரியூட்டு மேடையை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:சாதாரண பம்ப் ஸ்டவ் தொழில்நுட்ப அடிப்படையில் சக்கரங்களுடன் கூடிய நடமாடும் தகன மேடை உருவாக்கப்பட்டுள்ளது.

  இதில், திரவ எரிவாயு மூலம், 1,000 டிகிரி வெப்பத்தில் சடலத்தை எரிக்கலாம். சாம்பலை அகற்ற இருபுறமும் உருக்கு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வழக்கமாக, தகன மேடையின் வெப்பநிலை தணிய, 48 மணி நேரம் ஆகும். ஆனால், நடமாடும் தகன மேடையில், 12 மணி நேரத்தில் வெப்பம் குறையும் அளவிற்கு, 'இன்சுலேட்டர்'கள் பொருத்தப்பட்டுள்ளன.

  பொதுவாக ஒரு உடலை எரிக்க ரூ.2,500 மரக்கட்டைகளுக்குச் செலவாகும். ஏழைக்குடும்பங்களுக்கு இத்தகைய வசதி இல்லாத போது பாதி எரிந்த உடலை அவர்கள் பார்க்க நேரிடுகிறது., பாதி எரிந்த உடலை அல்லது முழு உடலையும் நதிகளில் எறிந்து விடுகின்றனர்.

  இந்த நடமாடும் தகன மேடையில் சக்கரங்கள் உள்ளன, இதனை எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லலாம் என்கிறது அந்த நிறுவனம். சாதாரணமாகச் செலவாகும் விறகை விட இதில் பாதிதான் செலவாகிறது. கரியமில வாயு வெளியேற்றமும் குறைவதாக சீமா பாய்லர்ஸ் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.43 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 4,000 பேர் பலியாக இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 37.4 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
  Published by:Muthukumar
  First published: