இந்தியாவில் கடந்த 287 நாட்களில் இல்லாத, குறைவான அளவாக, கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. புதிதாக 8,865 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் கேரளாவில் மட்டும் 4,547 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 3 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 11 ஆயிரத்து 971 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 61 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.
197 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 1லட்சத்து 30 ஆயிரத்து 793 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோன தடுப்பூசி திட்டத்தை வீடுகள்தோறும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி திட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த ஏதுவாக ‘ஒவ்வொரு வீட்டையும் தட்டவும்’ என்ற பிரசாரத்தை கையில் எடுத்துள்ளது.
Must Read : 40 ஆண்டுகளாக மரத்தடியில் வாழும் நரிக்குறவர் சமூகத்தினர் : வீடு கட்டித்தர கோரிக்கை
இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள், வளர்ச்சிக்குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வீடு வீடாக தடுப்பூசியை எடுத்துச்செல்வதற்கு, அரசுடன் இந்த அமைப்புகள் எந்தவகையில் பங்காற்ற முடியும் என்று விவாதித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.