கொரோனா பாதிப்பால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுக்கான யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

UPSC

கொரோனா பாதிப்பின் காரணமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

  மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், 2021ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு, ஜுன் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த சூழலில், தற்போது தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: