கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3577-ஆக அதிகரிப்பு.. 83-ஆக உயர்ந்த உயிரிழப்பு..!

இந்தியாவில் அதிக அளவாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3577-ஆக அதிகரிப்பு.. 83-ஆக உயர்ந்த உயிரிழப்பு..!
மாதிரிப்படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3577-ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு 83-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதுவரை 274 மாவட்டங்களில் கொரோனா தடம் பதித்தள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு 83 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 275 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 4 மாநிலங்களிலும், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 503 பேரும், கேரளாவில் 306 பேரும், தெலங்கானாவில் 269 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading