கொரோனா பாதித்தவர் இறந்ததால் ஆத்திரத்தில் மருத்துவரை தாக்கிய உறவினர்கள்- IMA கடும் கண்டனம்

அசாமில் மருத்துவர் தாக்கப்பட்ட காட்சி.

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாபதியை கடுமையாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

 • Share this:
  அசாம் மருத்துவர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

  இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உழைத்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்்கின்றனர்.

  இவ்வாறு, கரோனா முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மருத்துவர்கள் மீது நாட்டின் பல்வேறுபகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சத்திலும், கவலையிலும் ஆழந்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அசாமில் மருத்துவர் மீது நோயாளிகளின் உறவினர் கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நம்மால் உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Also Read:  Reliance: கொரோனாவால் ஊழியர் உயிரிழந்தால், குடும்பத்துக்கு 5 ஆண்டுகள் முழு சம்பளம்; குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு - ரிலையன்ஸ் அறிவிப்பு

  முன்னதாக, அசாமில் மருத் துவரை தாக்கியதாக 24 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதில் 7 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது. 14 பேர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

  இதில் மூன்று பேர் தாங்கள் மைனர்கள் என்று கோரியுள்ளனர். இவர்களது வயது சான்றிதழை கோர்ட் கேட்டுள்ளது. தாக்கப்பட்ட மருத்துவர் பெயர் டாக்டர் சியூஜ் குமார் சேனாபதி. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நோயாளி சீரியஸாக இருப்பதாக உறவினர்கள் இவரிடம் கூற அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக சேனாபதி கூறியுள்ளார். இதனையடுத்து ஆத்திரத்தில் இவரைப் போட்டு அடித்து உதைத்தனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: