• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இறந்தவரின் உடலை புல்டோசர் வண்டியில் கொண்டு சென்று குழியில் தள்ளிய குடும்பம்- கொரோனா மரணத்தினால் பயம்

இறந்தவரின் உடலை புல்டோசர் வண்டியில் கொண்டு சென்று குழியில் தள்ளிய குடும்பம்- கொரோனா மரணத்தினால் பயம்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் கொரோனாவினால் மரணமடைய, பரவல் பயம் காரணமாக இறந்தவரின் உடலை புல்டோசரில் கொண்டு சென்று குழியில் தள்ளியுள்ளது ஒரு குடும்பம்.

  • Share this:
    கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் நகரில் குடும்பம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமையில் இருந்தார், ஆனால் திடீரென அவர் இறந்து போனார். இறந்தது குடும்பத் தலைவர் என்று தெரிகிறது, இந்நிலையில் அவரது மகன் கூறும்போது, கோரக்பூர் மருத்துவமனையில் தந்தைக்கு பாசிட்டிவ் என்று வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    ஆனால் சிகிச்சை போதாமையினால் அவர் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார். இதனையடுத்து கொரோனா மரணம் என்பதால் பரவல் அச்சத்திலிருந்த குடும்பம் அவரது உடலை புல்டோசர் வண்டியில் திரட்டி ஏதோ கட்டிட இடிபாடை அகற்றுவது போல் கொண்டு சென்று குழியில் போட்டுள்ளனர்.

    புல்டோசரில் உடலைக் கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வளைய வந்தது.

    இது ஏன் என்று அவரிடம் உள்ளூர் பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு மகன், “இப்படித்தான் எல்லா இடங்களிலும் செய்வதாக நினைத்தோம், எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.

    கிராமத் தலைவர் திரியோகானந்த் கவுதம் இது தொடர்பாகக் கூறுகையில், “நாங்கள் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறினோம், ஆனால் குடும்பத்தினரே அவர் உடலை தொட மறுத்ததால் நாங்களும் விலகிக் கொண்டோம்” என்றார்.

    இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூட கொரோனா நோயாளி இறந்தால் அவரை அடக்கம் செய்யும் விதம் பற்றி போதிய தகவல்கள் கிராமத்தினரிடையே இல்லாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    கங்கையில் மேலும் மிதந்த உடல்கள்:

    இதற்கிடையே பதேபூர் மாவட்டத்தில் கங்கை நதியில் 6 பிணங்கள் மிதந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பதேபூர் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் இது தொடர்பாக கூறுகையில், ரே பரேலி நோக்கி இந்த உடல்கள் மிதந்து சென்றன என்றார்.

    ஆனால் 6 உடல்களையும் மீட்டுள்ளனர். உடல்கள் மிகவும் அழுகியிருந்தன. உடலை அடையாளம் காண முடியாத நிலையில் பிதோரா காட்டில் முழு மரியாதையுடன் உடல்கள் இறுதிச் சடங்குடன் எரிக்கப்பட்டதாக மேஜிஸ்ட்ரேட் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: