Home /News /national /

இந்தியாவில் 132 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை

இந்தியாவில் 132 கோடியை தாண்டிய கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை

கொரோனா

கொரோனா

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 140 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

    நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 76,36,569 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 132 கோடியை தாண்டியுள்ளது. மொத்தம் 1,37,65,868 அமர்வுகள் மற்றும் முகாம்கள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 9,265 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,41,14,331 ஆக அதிகரித்துள்ளது.

    Also Read :  நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்

    இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.36 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்கு பிறகு அதிக அளவாகும். .

    மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 44 நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,992 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

    நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 93,277 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.27 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு ஆகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 12,50,672 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 65.46 கோடி கொவிட் பரிசோதனைகள் (65,46,27,300) செய்யப்பட்டுள்ளன.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 140 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

    Also Read : கொரோனா காலத்தில் எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக்கூடாது என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது : பிரதமர் மோடி

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 18.28 கோடிக்கும் மேற்பட்ட (18,28,89,386) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

    இதற்கிடையே, இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், மாஸ்க் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், மூன்றரை வயது குழந்தையும் அடங்கும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மும்பையில் 144 தடை உத்தரவு 2 நாட்களுக்கு போடப்பட்டுள்ளது.

    இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் லேசாகவே உள்ளது. அதாவது, உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளுடன் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. உலக அளவில் 59 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி