Home /News /national /

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 127.93 கோடியை கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 127.93 கோடியை கடந்தது

தடுப்பூசி

தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் 8,86,263 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 64.82 கோடி கோவிட் பரிசோதனைகள் (64,82,59,067) செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 24,55,911 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று 127.93 கோடியைக் (1,27,93,09,669) கடந்தது. 1,32,86,429 அமர்வுகள் மற்றும் முகாம்கள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 8,834 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,69,608 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.35 சதவீதமாக உள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 162 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,306 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

    Also Read : இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி? : இன்று ஆலோசனை

    இன்றைய நிலவரப்படி, நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 98,416 ஆக உள்ளது; நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.28 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் பதிவான மிகக்குறைந்த விகிதம் இதுவாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 8,86,263 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 64.82 கோடி கோவிட் பரிசோதனைகள் (64,82,59,067) செய்யப்பட்டுள்ளன.

    Also Read : தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    வாராந்திரத் தொற்று உறுதி, கடந்த 22 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.78 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 63 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழேவும், 98 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

    இதற்கிடையே,கொரோனா  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தியதில், நாட்டில் முதலிடம் பெற்றிருப்பதற்காக இமாச்சலப் பிரதேச முதலமைச்சரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
    Published by:Musthak
    First published:

    Tags: Covaxin, Covid-19, Covishield

    அடுத்த செய்தி