Home /News /national /

Corona Update: இந்தியாவில் ஒரே நாளில் 3,324 பேருக்கு கொரோனா பாதிப்பு

Corona Update: இந்தியாவில் ஒரே நாளில் 3,324 பேருக்கு கொரோனா பாதிப்பு

Covid-19 tally - இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 324 பாதிப்பும், 40 உயிரிழப்புகளும் பதிவானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் தினசரி கோவிட்-19 பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 3,324 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864ஆக உயர்ந்துள்ளது.

    18 ஆயிரத்து 684 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஒரு நாளில் 40 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 843ஆக உள்ளது. நேற்று மட்டும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 087 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த சில நாள்களாக தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 513 பாதிப்புகள் பதிவானதை அடுத்து மாநிலத்தின் மொத்த கோவிட் பாதிப்பு 34 லட்சத்து 53 ஆயிரத்து 932ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ள நிலையில், 513 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் நபர்களை கண்காணித்து ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய கர்நாடகா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து 2ஆவது நாளாக 1,500க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு டெல்லியில் பதிவானது.

    இதையும் படிங்க: ஆப்ரேசன் விடியல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

    உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ள நிலையில், இதுவரை 189 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 25 லட்சத்து 267 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி