“கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஆபத்தில் உள்ளது” - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

“கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஆபத்தில் உள்ளது” - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

கொரோனா

நாட்டில் கொரோனா பரவல் மோசமான நிலையில் இருந்து, மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    கொரோனா தொற்று பரவலால் முழு நாடும் ஆபத்தில் உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே பால் ஆகியோர், டெல்லியில் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாட்டில் கொரோனா பரவல் மோசமான நிலையில் இருந்து, மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட குறிப்பிட்ட 8 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பதாகவும், அங்கு பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். புனே, மும்பை, தானே உள்ளிட்ட 10 நகரங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும், நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பே திணறும் சூழல் ஏற்படலாம் எனவும் எச்சரித்தனர்.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 49 ,335 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,280 பேரும்,  இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301பேரும் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.

    நாட்டில் இதுவரை சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது. 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published: